
தமிழில் முன்னணி நடிகர் தனுஷ். 'அசுரன்', 'வட சென்னை' எனத்தொடர்ந்து பெரும் வெற்றிப் படங்களைத் தந்து வருகிறார். தனுஷ், தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான 'தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பக்கீர்'படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. அப்படம் தமிழில் 'பக்கிரி' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு கடந்த ஆண்டு வெளியானது.
பாலிவுட்டில் 'ராஞ்சனா' படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து, அமிதாப் பச்சனோடு 'ஷமிதாப்' என்ற படத்தில் நடித்தார்.இதைத் தொடர்ந்து பாலிவுட்டில், முன்னணி நடிகரான அக்ஷய்குமாரோடு இணைந்து 'அத்ராங்கி ரே'என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக சாரா அலிகான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராயே இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு, கரோனா தொற்று பரவலால்பாதிக்கப்பட்டு, சமீபத்தில் மதுரையில்மீண்டும்தொடங்கியது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை டிசம்பர் மாதம் முடித்து, அடுத்த வருடம் காதலர் தினத்தன்று வெளியிட படப்பிடிப்பு குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள்வெளிவந்தன. இந்தநிலையில், 'அத்ராங்கி ரே'படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள தனுஷ், படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, டெல்லியில்நடந்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)