Skip to main content

தனுஷ் பட போஸ்ட்டரால் அப்செட்டான ரசிகர்கள்! 

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

dhanush fans disappointed Thiruchitrambalam movie poster

 

செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ் ' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி படக்குழு இன்று வெளியிட்டுள்ள அப்டேட்டில் நாளை திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் அறிவிப்புகள் வெளியாகும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து கடுப்பான தனுஷ் ரசிகர்கள் இதெல்லாம் ஒரு அப்டேட்டா என்று படக்குழுவை வறுத்தெடுத்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய அறிவிப்பு படத்தின் ரிலீஸ் அல்லது ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தல்” - பிரகாஷ் ராஜ்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
prakash raj shard a election viral song

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. 

அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ‘தேசத்தின் துயரக் குரல்’ என்ற தலைப்பில், ஒப்பாரி வடிவிலான பிரச்சாரப் பாடல் வெளியாகி, இந்திய அளவில் வைரலாகி வருகிறது. இப்பாடலை புத்தர் கலைக் குழுவைச் சேர்ந்த மகிழினி மணிமாறன் பாடியுள்ளார். இப்பாடலை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர் 

அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், இப்பாடலை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தல். எதை நாம்  தேர்ந்தெடுக்க போகிறோம்?” என பதிவிட்டுள்ளார்.  

Next Story

தனுஷ் படத்திற்கு எழுந்த சிக்கல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
dhanush kubera title issue

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக திருப்பதியில் படப்பிடிப்பு நடந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் பரபரப்பானது. மேலும் அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக் கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு இடத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. 

இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கடந்த மாதம் வெளியானது. குபேரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த படக்குழு, டைட்டில் லுக் வீடியோவையும் வெளியிட்டது. போஸ்டரில் தனுஷ் முடி கலைந்து, தாடியுடன் அழுக்கான வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா என்பவர், தெலுங்கானா ஃபிலிம் சேம்பரில் ஏற்கனவே குபேரா என்ற தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தான் தலைப்பை பதிவு செய்த போதிலும் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தனது படத்தின் பெயரை சேகர் கம்முலா பயன்படுத்தியதாகவும், இது குறித்து தெலுங்கானா பிலிம் சேம்பரிடம் பேச முயற்சித்தும் சரியாக பதில் வரவில்லை என்றும் குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் சட்ட நடவடிக்கை மூலம் பிரச்சினையை தீர்க்க முயல்வதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.