dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். ஜகமே தந்திரம், கர்ணன் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஜூலை 28ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய தனுஷிற்கு, அவரது ரசிகர்களால் சமூக ஊடகங்களில் வாழ்த்து மழை பொழிந்தது.

Advertisment

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து பிரபலங்களின் ட்வீட்களுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார் தனுஷ். அதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், “என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போய்விட்டேன்.

அனைத்து பிறந்த நாள் டிபிக்கள், மாஷ்-அப் வீடியோக்கள், மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த கவுன்டவுன் டிசைன்கள் அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். மிக்க மிக்க நன்றி.

அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான், உங்களால் கர்வம் கொள்கிறேன், பெருமைப்படுகின்றேன்!

மேலும், எனக்குத் தொலைபேசி வாயிலாகவும், பத்திரிகை மூலமாகவும், சமூக வலைதளங்கள் வழியாகவும் வாழ்த்துகள் தெரிவித்த திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பெருமக்கள், நண்பர்கள் மற்றும் பண்பலை, ஊடகம், தொலைக்காட்சி அன்பர்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.