Skip to main content

தனுஷின் 50வது படம் - தொடரும் வெற்றி கூட்டணி

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

dhanush 50th film update

 

இந்திய அளவில் கவனிக்கப்படும் ஹீரோவாக இருக்கும் தனுஷ், நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எனப் பல்வேறு தளங்களில் பயணித்து வருகிறார். அந்த வகையில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ள தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.  

 

இந்த நிலையில் தனுஷின் 50வது படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதை சமுக வலைதள பக்கத்தில் தெரிவித்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் தனுஷ் விரைவில் படம் குறித்த அப்டேட்டை வெளியிடுவோம் என குறிப்பிட்டுள்ளனர். 

 

முதன் முறையாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. முன்னதாக தனுஷின் 'படிக்காதவன்', 'ஆடுகளம்', 'மாப்பிள்ளை' உள்ளிட்ட படங்களை   சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்தது. இதனை தொடர்ந்து தனுஷின் 50வது படம் என்பதாலும் மீண்டும் சன் பிக்சர்ஸுடன் கூட்டணி என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் 50வது படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இப்படம் மூலம் மீண்டும் ஒரு முன்னணி நடிகரான தனுஷின் 50வது படத்தில் கூட்டணி அமைத்துள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.