Skip to main content

“உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை...” -இயக்குனர் தேசிங் பெரியசாமி 

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
desing periyasamy

 

 

இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படம் வெளியானபோது பெரிய எதிர்பார்ப்புகளின்றி வெளியாகி, பின்னர் படம் நன்றாக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு பலர் திரையரங்கில் பார்த்தனர். 

 

இப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி பெரும் ரஜினி ரசிகர் என்பதை தொடக்கத்திலிருந்து தெரிவித்து வந்தார். குறிப்பாக படத்தில் பல ரஜினி ரெஃபரன்ஸ் ஷாட்கள் இடம்பெற்றிருக்கும். படம் வெளியானபோதே ரஜினி சார் நல்ல படங்களை பார்த்தால் கண்டிப்பாக அழைத்து பேசுவார். அதுபோல என் படத்தையும் பார்த்துவிட்டு, அழைத்து பேசுவார் என்று காத்திருக்கிறேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

 

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் லாக்டவுனில் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். ஷூட்டிங் எதுவும் நடைபெறாததால் பிரபலங்களும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். 

 

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பார்த்துவிட்டு இயக்குனர் தேசிங்கை பாராட்டியுள்ளார். அந்த உரையாடல் இணையத்தில் லீக்காகி உள்ளது. இது தொடர்பாக இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், 

 

“வாழ்த்து தெரிவித்த எல்லாருமே, "என்கிட்டயே தலைவர் பேசுனது மாதிரி அவ்வளவு சந்தோஷம்னு சொல்றாங்க". உங்களுடைய அன்புக்கு நன்றி. ஆனால், தனிப்பட்ட முறையில் போன் உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை. ஏனென்றால் அது மிகவும் பெர்சனலான தொலைபேசி உரையாடல்.

 

ஆகையால்தான் எனது ட்வீட்டில் கூட நான் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக உரையாடல் வெளியாகிவிட்டது. எல்லாம் நன்மைக்கே. மீண்டும் உங்களுடைய அனைவரது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி”  என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல் - சிம்பு கூட்டணி பட இயக்குநர் பரபரப்பு புகார்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
simbu movie director desingh periyasamy complaint

துல்கர் சல்மான் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங் பெரியசாமி. இப்படத்தை அடுத்து தற்போது சிம்புவின் 48ஆவது படத்தை இயக்கவுள்ளார். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் இவர், தன்னுடைய உதவி இயக்குநர் ரூ.3 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார் கொடுத்துள்ளார். அண்ணா நகர் காவல் நிலையத்தில் தேசிங் பெரியசாமி கொடுத்த புகார் மனுவில், “என்னிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முகமது இக்பால் என்பவர் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் என் வீட்டு வரவு செலவு கணக்குகளை அவர் தான் கவனித்து வந்தார். இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 150 கிராம் தங்க நகைகளை முகமது இக்பாலிடம் கொடுத்து தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்று வருமாறு கூறியிருந்தேன். ஆனால் அவர் அடகு வைத்துக் கிடைத்த 3 லட்ச ரூபாயை திருடி விட்டார். பணம் குறித்துக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்” எனக் குறிப்பிட்டு முகமது இக்பால் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், முகமது இக்பால் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமைறைவாக இருக்கும் அவரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேசிங் பெரியசாமி குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சரித்திர படத்தில் சிம்பு - கமல் வெளியிட்ட போஸ்டர்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
str 48 simbu poster

'பத்து தல' படத்தை தொடர்ந்து தனது 48 வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இப்படத்தை  கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.  இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 9ஆம் தேதி அன்று வெளியானது. பின்பு ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. 

இப்படத்திற்காக வெளிநாட்டில் சிறப்பு பயிற்சி சிம்பு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வரலாற்று பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த மாஸ் படமாக இப்படம் உருவாவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நாளை சிம்புவின் பிறந்தநாள் என்பதால், அவரின் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தற்போது புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்து, சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். போஸ்டரில் தலைப்பு இடம்பெறும் என எதிர்பார்த்த நிலையில் இடம்பெறவில்லை. மேலும் இரண்டு சிம்பு நேருக்கு நேர் மோதத் தயாராக இருக்கும் புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் வரலாற்று கதைகளில் இருக்கும் கதாபாத்திரம் போல் சிம்புவின் கெட்டப் இருக்கிறது.