Skip to main content

‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிட்டார் கமல்ஹாசன்...

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது.
 

darbar rajni

 

 

மூன்று கட்டங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியும் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுவிட்டார். 

இந்நிலையில் கடந்த மாதம் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் சாங் நவம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 

sss


தமிழ் மொழியில் கமல்ஹாசனும், மலையாள மொழியில் மோகன் லாலும், ஹிந்தி மொழியில் சல்மான் கானும், தெலுங்கு மொழியில் மகேஷ் பாபுவும் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் சாங்கை வெளியிட்டுள்ளனர். 
 


 

Pollution

 

சார்ந்த செய்திகள்