Skip to main content

அஜித் படத்தில் பணியாற்றிய நடன இயக்குநர் மரணம்

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

Dance director who worked with Ajith dies

 

சின்னா, தமிழ் திரைத்துறையில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். மேலும் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். சலீம், சேஷூ, வேம்பட்டி சத்தியம், பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, போன்ற நடன இயக்குநர்களிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். பாக்கிய ராஜ் இயக்கத்தில் வெளியான 'தூரல் நின்னு போச்சு' படம் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'வைதேகி காத்திருந்தாள்', அஜித்தின் முதல் படமான 'அமராவதி', 'செந்தூர பாண்டி', 'வானத்தை போல' உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

 

இந்நிலையில் நடன இயக்குநர் சின்னா நேற்று (15.06.2022) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். சின்னா, சின்ன திரை நடிகை மற்றும் நடன இயக்குநருமான ஜெனிபரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்