Skip to main content

“என்னையும் வாழவைத்தது சென்னை தான்” - பாலாவின் செயலுக்கு பலரும் பாராட்டு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

comedy actor bala helped affected people of cyclonemichaung

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

திரைப்பிரபலங்கள் அஜித், விஜய், பார்த்திபன், இமான் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளனர். அவர்கள் சார்பில் வீடு வீடாக அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகர் பாலா பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு பண உதவி செய்துள்ளார்.   

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை மழையால் என்னால் வெளியில் வர முடியவில்லை. இல்லையென்றால் முன்னரே ஏதாவது பண்ணியிருப்பேன். அவரவர் தேவைக்கேற்ப வாங்கி கொள்ளும் வசதியாக 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளேன். 2015 அப்போ உதவி செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அப்போது காசு இல்லை. இப்போ என்கிட்ட 2 லட்சம் காசு இருந்தது. அதை அப்படியே கொடுத்துள்ளேன். வந்தாரை வாழவைக்கும் சென்னை. என்னையும் வாழவைத்தது சென்னை தான். நம்மல பாத்துகிட்டது சென்னை தான். அதனால் நம்மால் முடிந்ததை செய்து இந்த ஊரை பார்த்துக்க வேண்டும்” என்றார். பாலாவின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.  

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரிலீஸுக்கு ரெடியான பாலாவின் வணங்கான்

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
vanangaan release update

பாலா தற்போது இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இதில் முன்பு சூர்யா கமிட்டாகி நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் விலகிவிட்டார். மேலும் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வந்தார். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கி, பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்க கதாநாயகியாக ரோஷிணி பிரகாஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் கடந்த டிசம்பர் மாதம் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. டீசர் பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனிடையே மலையாள நடிகை மமிதா பைஜு, இப்படத்தில் நடித்தபோது பாலா அடித்ததாகவும் அதன் காரணத்தால் படத்தை விட்டு வெளியேறியதாகவும் பகிர்ந்திருந்தார். அது கோலிவுட்டில் சற்று பரபரப்பை எற்படுத்த பின்பு “நான் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த விதமான துஷ்பிரயோகத்தையும் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அனுபவிக்கவில்லை. இதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிற தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே, அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என விளக்கமளித்திருந்தார். 

இந்த நிலையில் இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூலையில் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பாலா, அருண் விஜய் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 12ல் ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

சீமானுடன் முரண்; பாலாவுடன் பிரிவு - காரணம் பகிர்ந்த அமீர்

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
ameer about bala and seeman

இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நக்கீரன் ஸ்டூடியோஸ் யூடிப் தளத்தில் படம் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது, பாலா மற்றும் சீமானிடம் இடைவெளி ஏற்பட்டது தொடர்பாக பேசிய அவர், “பாலாவுடைய இடைவெளி என்பது, அரசியல் ரீதியாக கருத்து முரண்களால் ஏற்பட்டது அல்ல. சினிமா எனும் மாயையால் ஏற்பட்டது. இங்கு, ஒரு இயக்குநர் இப்படித்தான் இருக்க வேண்டும், நடிகர் இப்படித்தான் இருப்பார் எனப் பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது எதுவுமே அவர்களுடைய ஒரிஜினல் கேரக்டர் கிடையாது. அது வேறு. வீட்டில் என்னவாக இருக்கிறார்களோ அதுதான் அவர்களுடைய ஒரிஜினல். பொதுவெளியில் அவர்கள் பெற்றிருக்கிற வெற்றியின் அடிப்படையில், அவர்களுடைய சம்பளத்தின் அடிப்படையில், வரவேற்பின் அடிப்படையில், வியாபாரத்தின் அடிப்படையில் வைத்து, கட்டமைக்கப்படுகிற பிம்பம், அதை ஏற்காமல்தான் நானும் பாலாவும் பிரிந்தோம். 

ஆனால் சீமானுடன் ஏற்பட்ட இடைவெளி, அரசியல் ரீதியான கருத்துக்கள். ஒரு வேளை நான் சொன்னது நாளைக்கு சரியாக இருக்கலாம். ஒரு வேளை அவர் சொன்னது கூட நிஜமாக இருக்கலாம். இதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். பிரிந்தோமே தவிற உறவே இல்லாமல் இல்லை. பாலா இப்போதும், என்னுடைய வீட்டில் வந்து என் அண்ணனுடன் பேசிக்கொள்கிறார். நானும் அவருடைய குடும்பதினருடன் பேசுவேன். சினிமாவில் உறவில்லை. சீமானுடனும் இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கேன். அண்ணன் தம்பி உறவுகளிலிருந்து நான் விலகவில்லை. அரசியல் எங்களைப் பிரித்து வைத்துள்ளது. எது சரி, தப்பு என்று காலம் தான் முடிவுசொல்லும்” என்றார்.