Skip to main content

"எல்லா மாற்றமும் அர்த்தம் உள்ளது" - மனதை கவரும் என ஜீவா நம்பிக்கை

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

 Coffee With Kadhal movie Maatram song Lyrical Video released

 

இயக்குநர் சுந்தர் சி, ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அவ்னி சினிமா மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் 'காஃபி வித் காதல்' படத்தின் 'மாற்றம்' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பார்க்கையில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மூவரின் வாழ்க்கையிலும் அவர்களின் காதலிகளுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அந்த சூழ்நிலையை விவரிப்பது போல இப்பாடல் அமைந்துள்ளது. பா.விஜய் வரிகளில் வெளியாகியுள்ள இப்பாடலில், "வாழ்க்கை என்பது நூறு மாற்றம் கொண்டது. இருந்தாலும் எல்லா மாற்றமும் அர்த்தம் உள்ளது" என இடம்பெறும் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

இப்பாடலை ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மனதைக் கவரும் இப்பாடலை கேட்டு ரசியுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதே போல் படக்குழுவினர் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இப்பாடலை பகிர்ந்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரண்மனை 4’ - ரிலீஸ் அப்டேட் சொன்ன குஷ்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sundar c aranmanai 4 release update

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. 

'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக கடந்த வருட தொடக்கத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகவும் லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளம் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. சுந்தர்.சி இயக்கி நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அப்போது கடந்த பொங்கலன்று வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளியாகவில்லை, அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. 

இந்த நிலையில், அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்த மாதமான ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் புது போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

திரையரங்கில் அடிதடி - தொண்டர்களால் பரபரப்பு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
yatra 2 fans fight between jegam mogan reddy pawan kalyan

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'யாத்ரா 2' என எடுக்கப்பட்டுள்ளது.  ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துளளார். இப்படம் இன்று வெளியான நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள் திரையரங்கிற்கு வந்து மேள தாளத்துடன், வெடி வெடித்துக் கொண்டாடினர்.  

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில், படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்களுக்கும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ படம் கடந்த 7 ஆம் தேதி ரீ ரிலீஸாகியுள்ளது. இந்த சூழலில் இந்த தொண்டர்களின் அடிதடி சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சம்வவம் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.