Skip to main content

"நீங்கள் எப்படி இதை எதிர்கொள்கிறீர்கள் என்பதை அறிந்து வேதனையடைகிறேன்" -சிரஞ்சீவி வேதனை!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
gg

 

 

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நேற்று முன்தினம் கடும் மூச்சு திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், அவர் தன்னுடைய உடல்நலம் குறித்தும், சினிமாவிலிருந்து சில காலம் ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டார். 

 

இதையடுத்து அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும் அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படுத்தாத நிலையில், நேற்று மாலை சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் புதிய தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் பலரும் சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சஞ்சய் தத் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"அன்பான சஞ்சய் தத் பாய், இந்த உடல்நல பிரச்சனையை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை அறிந்து வேதனையடைகிறோம். ஆனால் நீங்கள் ஒரு போராளி & பல ஆண்டுகளாக பல நெருக்கடிகளை வென்றிருக்கிறீர்கள். பறக்கும் வண்ணங்களுடன் நீங்கள் இதிலிருந்து வெளியே வருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் விரைவாக குணமடைய எங்கள் அன்பும் பிரார்த்தனையும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸில் போட்டி? - சஞ்சய் தத் விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
sanjay dutt election issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விரைவில் ஒரு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. இந்த நிலையில், இந்த தகவல் குறித்து சஞ்சய் தத் தற்போது விளக்கமளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் அரசியலுக்கு வருவேன் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியலில் இறங்க முடிவு எடுத்திருந்தால், முதலில் முறையாக அறிவிப்பேன். தற்போது என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை நம்புவதைத் தவிர்க்கவும்” என குறிப்பிட்டுள்ளார். 

சஞ்சய் தத், அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். மேலும் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சஞ்சய் தத் சகோதரி பிரியா தத்தும் எம்.பி.யாக இருந்துள்ளார். அவரது தாயார் மற்றும் நடிகையுமான நர்கிஸும் எம்.பி யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

18 வருடம் கழித்து மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியான த்ரிஷா

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
trisha joined in chiranjeevi Vishwambhara

த்ரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் ஐடென்டிட்டி, மோகன்லாலின் 'ராம் பார்ட் 1' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படி தொடர்ந்து தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் 156வது படத்தில் இணைந்துள்ளார். வசிஷ்டா இயக்கும் 'விஷ்வாம்பரா' படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த பொங்கலன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அடுத்த வருடம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படம் மூலம் 18 வருடங்கள் கழித்து மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட த்ரிஷா, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் சிரஞ்சீவி, த்ரிஷாவிற்கு ஆதரவாக மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.