Skip to main content

''இதைத் தொடங்கும்போது, இது நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை'' - சின்மயி பெருமிதம்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

fs

 

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. இந்தத் தினக்கூலிப் பணியாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி வரும் நிலையில் பின்னணி பாடகி சின்மயி பாடல்களைப் பாடிய விடியோவை, இவரிடம் விரும்பி கேட்கும் ரசிகர்களுக்கு அனுப்பி அதன்மூலம் நிதி திரட்டி மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இப்படிப் பாடல் பாடுவதன் மூலம் இதுவரை 1,100-க்கும் மேலான ஏழைக் குடும்பங்களுக்கு நேரடியாகக் கிட்டத்தட்ட ரூ.30 லட்சம்வரை நிதி உதவி செய்துள்ள பாடகி சின்மயி இந்தப் பாடல் பாடி உதவி செய்வது குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
 

 

''எனது 2,050 ஆவது பாடல் வீடியோவை இன்று அனுப்பினேன். நான் இதைத் தொடங்கும்போது, ​​இது நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. நன்கொடையாளர்களை, பயனாளிகளுடன் நேரடியாக இணைப்பது சில குடும்பங்களுக்கு நீண்ட கால தேவைக்கும் உதவியுள்ளது. ஒட்டுமொத்தமாக இது எனக்கு ஒரு தாழ்மையான அனுபவமாகும்'' எனப் பதிவிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

"இனி இவர்களை சுற்றியே எங்கள் பிரபஞ்சம்" - பாடகி சின்மயி நெகிழ்ச்சி!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

singer chinmayi mother twins

 

கடந்த 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார் சின்மயி. அதன்பிறகு ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள சின்மயி விண்ணைத்தாண்டி வருவாயா, 96, தள்ளி போகாதே உள்ளிட்ட பல படங்களின்  கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். 

 

இந்நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து பாடகி சின்மயிக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அவர்களுக்கு திரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.  மேலும் இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த சின்மயி, இனி இவர்களைச் சுற்றியே எங்கள் பிரபஞ்சம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பாடகி சின்மயிக்கு த்ரிஷா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

Next Story

சின்மயி, லீனா மணிமேகலைக்கு இடைக்கால தடை!

Published on 20/01/2022 | Edited on 21/01/2022

 

Interim ban on Chinmayi and Leena Manimegala!

 

திரைப்பட இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமில்லாத கருத்துக்களை வெளியிட்டதாக கவிஞர் லீனா மணிமேகலை மற்றும் பாடகி சின்மயிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

கவிஞர் லீனா மணிமேகலை, சின்மயி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 'தனக்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை லீனா மணிமேகலை பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும், சமூக ஊடகங்களும் வெளியிட்டதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும். தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டதற்கு  ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும்' என இயக்குநர் சுசி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

Interim ban on Chinmayi and Leena Manimegala!

 

இந்த வழக்கில் சுசி கணேஷன் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், 'கவிஞர் லீனா மணிமேகலை மீது தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்கள் தரப்பை பழிவாங்கும் நோக்கில் லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைய உள்ள நிலையில் திரைத்துறையில் எனது நட்பை கெடுக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும்' வாதம் செய்தார்.

 

இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், சுசி கணேஷன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்ட லீலா மணிமேகலை, சின்மயி ஆகியோருக்கு சுசி கணேசன் தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். அதேபோல் இந்த வழக்கில் கவிஞர் லீனா மணிமேகலை, சின்மயி மற்றும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.