Chief Minister congratulates actor Kamal Haasan

Advertisment

கமல்ஹாசன். அது வெறும் பெயர் அல்ல, சினிமா துறையில் சாதிக்கத்துடிக்கும் எண்ணிலடங்கா இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன். திரைத்துறையில் 4 அல்லது 5 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக நிலைத்து நிற்பதே கடினம். அப்படி இருக்கையில் 60 ஆண்டுகளுக்குமேல் தனது அசாத்திய திறமையால் திரையுலகைக் கட்டி ஆளும் கலையுலக நாயகன் கமல்ஹாசன். 6 வயதில் அரை கால்சட்டையுடன் தொடங்கிய இந்த அசாத்திய பயணம் 68 வயதைத்தாண்டியும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கமல்ஹாசன் எனும் மகா கலைஞனைநடிப்பு எனும் சிறு வட்டத்திற்குள் மட்டும் சுருக்க முடியாது. நடிப்பை தாண்டி, இயக்கம், எழுத்து, தயாரிப்பு, பாடகர் என ஒவ்வொரு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். தற்போது அரசியல் களத்திலும் உள்ளார்.

இவ்வளவு பெரும்புகழுக்கு சொந்தக்காரருக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் “கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி; மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.