Skip to main content

சேரன் இயக்கியுள்ள வெப் சீரிஸ் அப்டேட்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
cheran web series update

சேரன் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக 'திருமணம்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ள அவர், அடுத்ததாக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். சத்ய ஜோதி தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படம் குறித்து கிச்சா சுதீப் பிறந்தநாளன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சேரன், "ஆட்டோகிராப் போன்ற ஒரு மறக்க முடியாத பரிசை வழங்க காத்திருக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த 'ஆட்டோகிராஃப்’ படத்தை ‘மை ஆட்டோகிராப்’ என்ற தலைப்பில் கன்னடத்தில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதனிடையே ‘ஜர்னி’ என்ற தலைப்பில் ஒரு வெப் சீரிஸ் சேரன் இயக்கியிருந்தார். வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவுள்ளது. இதில் சேரன் விவசாயம் பற்றி அதிகம் பேசியிருக்கிறார். அது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சேரன். சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை வெளியிடவுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

உலா வந்த தகவல் -  மறுப்பு தெரிவித்த சேரன் 

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
cheran denied the news his directing prabhu deva kajol

இயக்குநர் மற்றும் நடிகரான சேரன், கடைசியாக ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். இதையடுத்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். சத்ய ஜோதி தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியானது. மேலும் ராமதாஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்தத் தகவல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சேரன், தான் சரத்குமாரை வைத்து மற்றொரு படம் இயக்கவுள்ளதாகவும் இந்தப் படம் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு இல்லை எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை இதனை மறுத்துள்ளார் சேரன். அவர் அடுத்து இயக்கவுள்ள கிச்சா சுதீப் படம் கைவிடப்பட்டதாகவும், பிரபு தேவா மற்றும் கஜோல் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் வதந்தி உலா வந்தது. இதனை மறுத்த சேரன், “தவறான செய்தி. கிச்சா சுதீப்பின் 47வது படத்தில் பணியாற்றி வருகிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Next Story

  'உப்பு புளி காரம்' - வெப் சீரிஸின் ரிலீஸ் அப்டேட்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Uppu Puli Kaaram release update

ரமேஷ் பாரதி இயக்கத்தில் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள வெப் சீரிஸ் 'உப்பு புளி காரம்'. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷேக் இசையமைத்துள்ள இந்த சீரிஸ், ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி நடப்பவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சீரிஸின் 'குடும்பப் பாட்டு' எனும் தீம் பாடல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த சீரிஸின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 30ஆம் தேதி இந்த சீரிஸ் ஹாட்ஸ்டார் ப்ளஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல திருப்பங்களுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.