/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/94_45.jpg)
இயக்குநரும், நடிகருமான சேரனின் தந்தை பாண்டியன் (84). இவர் சினிமா ஆபரேட்டராக பணியாற்றினார். சமீப காலமாக உடல் நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற அவர், இன்று அதிகாலை 6.30 மணியளவில் மதுரை பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.
இவரது மரணம் சேரன் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சேரனின் ரசிகர்களும் பாண்டியன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாண்டியன் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.
சேரன் தற்போது சத்யஜோதி ஃபிலிம்ஸ்தயாரிப்பில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். மேலும் நடிப்பிலும்கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)