
சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியான படம் 'தாதா 87'. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவது குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “இப்படத்தினை பார்த்த பலரும் சாருஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டனர். இதனை மனதில் வைத்து பலம் என்பது உடல் வலிமையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அது மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல சாணக்கியனாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து சாருஹாசனை மீண்டும் இயக்க விஜய் ஸ்ரீ ஜி. திட்டமிட்டுள்ளார்.
உள்ளூரில் சாமான்யதாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தைக் கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்ற பின்னணியில் இப்படம் உருவாகிறது.
லாக்டவுன் நேரத்திற்கு முன் 'தாதா 87- 2.0' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 7 நாட்கள் நடைபெற்றது.
சாருஹாசன், முக்கிய வேடத்தில் மைம் கோபி மற்றும் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த பலர் நடித்த முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டது.
லாக்டவுன் தடைநீக்கத்திற்குப் பின் அரசின் கட்டுப்பாடுகளோடு தேவையான படக்குழுவினரோடு சென்னை, கேரளா மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 'தாதா 87', 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' படத்திற்கு பின் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி மூன்றாம் முறையாக மீண்டும் விஜய் ஸ்ரீயுடன் இப்படத்தில் இணைகிறார். ஒளிப்பதிவைக் கோபி கவனிக்கிறார். விரைவில் இப்படத்தின் டீசர் வெளிவரவுள்ளது என்று” படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)