Skip to main content

கேன்ஸ் திரைப்பட விழா: பிரம்மாண்டமாக போஸ்டரை வெளியிட ‘அண்ணாச்சி’ படக்குழு திட்டம்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Cannes Film Festival: 'The Legend' crew plans to release a poster

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள், அவர்களது கடை விளம்பரங்களில் நடிப்பது வழக்கம். அதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போது 'தி லெஜண்ட்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'மோசலோ மொசலு' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தின் போஸ்டரை உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை இப்படத்தின் கதாநாயகி ஊர்வசி ராவ்டேலா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊர்வசி ராவ்டேலா , "தமிழ் சினிமாவில் அறிமுகமாவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும்  கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தி லெஜண்ட்’ படத்தின் போஸ்டர் வெளியீட்டிற்கு என்னை அழைத்திருப்பதற்காக பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார். 

 

'கேன்ஸ் திரைப்பட விழா 2022' இன்று தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய  தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில்  திரைபிரபலங்கள் ஏ.ஆர் ரஹ்மான், நயன்தாரா உள்ளிட்ட பலரும் இந்தியா சார்பில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவில் மாதவன் நடித்து இயக்கியுள்ள 'ராக்கெட்ரி - நம்பி விளைவு', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ’இரவின் நிழல்’, ஏ.ஆர் ரஹ்மான் இயக்கியுள்ள லீ மாஸ்க் (குறும்படம்) ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன.அதோடு கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த படைப்பான வேட்டுவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இந்த விழாவில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முதல் இந்திய ஒளிப்பதிவாளர்’ - சந்தோஷ் சிவனுக்கு கிடைத்த பெருமை

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Santosh Sivan Becomes The First Indian Cinematographer To Receive cannes film festival Pierre Angénieux Tribute

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா மே 14 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பதிவாளர்களைக் கௌரவிக்கும் வகையில் பியர் ஆசிங்யு (Pierre Angénieux) என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 24 ஆம் தேதி அவருக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதினை புகழ்பெற்ற பிலிப் ரூஸெலோட், வில்மோஸ் சிக்மண்ட், ரோஜர் டீக்கின்ஸ் உள்ளிட்ட 10 பேர் வாங்கியுள்ள நிலையில், இவ்விருதினைப் பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை சந்தோஷ் சிவன் பெறவுள்ளார். 

1986 ஆம் ஆண்டு மலையாள திரைத்துறை மூலம் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் அறிமுகமானார். தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என மொத்தம் 55 திரைப்படங்கள் மற்றும் 50 ஆவணப்படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் தளபதி, ரோஜா, இருவர், துப்பாக்கி எனப் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னத்துடன் இணைந்து தமிழில் அதிக படம் பணியாற்றியுள்ளார். இதுவரையில் 12 தேசிய விருது வாங்கிய அவர், இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.

Next Story

லெஜண்டுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

legend saravana new video viral

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது.  

 

பின்பு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த மாதம் வெளியானது. அதில் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது. 

 

இதனிடையே சரவணன் அருள் தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் புது கெட்டப்புடன் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அதில் தாடி வைத்து இருந்தார். அதே கெட்டப்புடன் கடந்த மாதம் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அதே கெட்டப்புடன் மாஸான லுக்கில் ரோல்ஸ்ராய்ஸ் காரில் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். அவரை பார்த்த பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அன்பான ரசிகர்களுடன்" என பதிவிட்டுள்ளார்.