Skip to main content

அமீர்கானால் எதிர்ப்பை சம்பாதித்த ஹிரித்திக் ரோஷன்

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

BOYGOTT VIKRAM VEDHA tag trend social media

 

அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லால் சிங் சத்தா'.  இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்துவிட்டது என்று அமீர்கான் கூறியதை சுட்டிக்காட்டி தற்போது லால் சிங் சத்தா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

ad

 

இதனிடையே நடிகர்  ஹிரித்திக் ரோஷன் லால் சிங் சத்தா படத்திற்கு ஆதரவாகவும், அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஹிரித்திக் ரோஷனுக்கு எதிராக பலரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.  அத்துடன் ஹிருத்திக் ரோஷன் தற்போது நடித்து வரும் விக்ரம் வேதா படத்திற்கு எதிராக #BOYGOTTVIKRAMVEDHA  என்ற ஹேஷ்டேக்கையும்  ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வைரலான வீடியோ - வழக்கு தொடுத்து அவசர விளக்கமளித்த அமீர்கான்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Aamir Khan files case for fake video and said Never endorsed any political party

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் திரைபிரபலங்களும் கலந்து கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கடந்த வாரம் லியோ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. ஆனால் அத்தகவலை சஞ்சய் தத் மறுத்திருந்தார். இந்த நிலையில் மற்றொரு பாலிவுட் முன்னணி நடிகரான அமீர் கான், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து அமீர் கான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமீர் கானின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது, “அமீர் கான் தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளித்ததில்லை. கடந்த பல தேர்தல்களில் தேர்தல் கமிஷன் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முயற்சிகளை எடுத்துள்ளார். அமீர் கான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி சமீபத்தில் வைரலான வீடியோவால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது போலியான வீடியோ என்றும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமீர் தெளிவுபடுத்த விரும்புகிறார். 

மேலும் அனைத்து இந்தியர்களையும் வெளியே வந்து வாக்களிக்குமாறும், நமது தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்கிறார். அமீர் கானின் அந்த வைரல் வீடியோ, ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பு அவர் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டவை. அதை ஏ.ஐ மூலம் எடிட் செய்துள்ளனர்” என்றார். 

Next Story

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் துவங்கும் ஹிரித்திக் ரோஷனின் வார் - 2

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
hrithik roshan war 2 update

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் வார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. 

இப்படம் குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய ஹிரித்திக் ரோஷன், “வார் 2 படம் விரைவில் துவங்க இருக்கிறது. படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டதை விட முன்கூட்டியே துவங்க உள்ளது” என்று தெரிவித்தார்.  இப்படத்தின் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23 ஆம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. 

இதற்காக ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஹிரித்திக் ரோஷன், "கபீர் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளான். இதனால் மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கபீரை இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்த எனக்கு சவாலாக இருக்கும். அவனின் மற்றொரு கோணம் வித்தியாசமாக இருக்க போகிறது," என்று தெரிவித்தார். இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.