Skip to main content

“ஏன் முறையாக விசாரிக்கப்படக் கூடாது?”- போஸ் வெங்கட்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

bose venkat

 

சாத்தான் குளத்தில் தந்தை மகன் இருவரையும் போலீஸ் அதிகாரிகள் இரவு முழுவதும் துன்புறுத்திக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை ஏற்று, சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்துள்ளனர்.

 

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

அதில், “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்படும் காணொலிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகமாக பகிரப்படுகிறது. இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்படக்கூடாது?

 

இதற்குக் காவல் துறையே ஒரு தனிக்குழு அமைத்து நடந்த சம்பவங்களை முறையாக விசாரித்துத் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். காவல் துறையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலி; எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024

 

Edappadi Palaniswami condoles the families of those who lost their lives in the firecracker factory accident

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்துவந்த நிலையில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும் போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இந்த நிலையில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் உரிய நிவாரணத் தொகை உடனடியாக வழங்கும்படி, இந்த திமுக அரசை வலியுறுத்துவதுடன், நான் ஏற்கெனவே பலமுறை வலியுறுத்தியபடி தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என்பதை இந்த அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில் தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.

Next Story

அஜித்தை விமர்சித்த போஸ் வெங்கட்

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Bose Venkat criticized Ajith

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே விஷ்ணு விஷால், தன்னுடைய வீட்டில் தண்ணீர் புகுந்து விட்டதாகவும் உதவியை எதிர்பார்ப்பதாகவும் பதிவிட்டிருந்தார். பின்பு தீயணைப்பு வீரர்கள் அவரையும் அதே பகுதியில் தனது தாயின் மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானையும் மீட்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் மக்களை பாதுப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.

 
இதையடுத்து அஜித் தங்களுக்கு போக்குவரத்து உதவிகளை செய்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்து, அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த பதிவை நடிகர் போஸ் வெங்கட் அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அஜித்தை விமர்சித்திருந்தார். அந்த பதிவில், “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்... (உங்களுக்குள்  நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்)” என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.