கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது என்று சொல்லலாம். நியூசிலாந்து அடித்த ரன்னை சமன் செய்தது இங்கிலாந்து. இதனையடுத்து ஐசிசியின் விதிப்படி சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதிலும் இங்கிலாந்து அடித்த ரன்னை நியூசி அணி சமன் செய்தது.
இதனால் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐசிசியின் இந்த விதிமுறை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. பலரும் இதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விதிமுறையை அமிதாப் பச்சன் பணத்தை வைத்து கலாய்த்துள்ளார். “உன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் ஒரே நோட்டாக இருக்கிறது. என்னிடம் ரூ.2 ஆயிரம் நான்கு 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கிறது. நம்மில் யார் பணக்காரர் என்று கேட்க அதற்கு நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ளவரே பணக்காரர் என்பார்கள்” என்று ஐசிசி சொல்வது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.