Skip to main content

'ப்ளூ சட்டை' மாறன் படத்துக்குத் தடை!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

vdsgds

 

யூட்யூப் வலைதளத்தில் தமிழ் டாக்கீஸ் என்ற பெயரில் படங்களை விமர்சிப்பவர் ப்ளூ சட்டை மாறன். எந்த மாதிரியான படங்கள் என்றாலும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சிப்பதால் இவர் இணையத்தில் மிகவும் பிரபலம். இதனால், திரையுலகினர் அவ்வப்போது இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டை எழுப்பி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் 'ஆன்டி இண்டியன்' எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடித்து கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சாருக்கு அனுப்பினார். இப்படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் 'ஆன்டி இண்டியன்' படத்தை முழுமையாகத் தடை செய்துள்ளனர்.    

 

மதம் சார்ந்த சமகாலப் பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி நையாண்டி செய்து எடுக்கப்பட்ட இப்படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்தடை குறித்து  தயாரிப்பாளர் 'மூன் பிக்சர்ஸ்' ஆதம் பாவா கூறுகையில்... ''சென்சார் குழுவினர் அவர்களின் முடிவைச் சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி 'ஆன்டி இண்டியன்' படம் திரைக்கு வரும்" எனக் கூறியுள்ளார். சமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் 'உட்தா பஞ்சாப்', தீபிகா படுகோனின் 'பத்மாவத்' போன்ற படங்களுக்கும் இதுபோன்று தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை மாறன்...? வெளியான புகைப்படமும் விளக்கமும்

Published on 20/03/2022 | Edited on 20/03/2022

 

Blue shirt Maran attacked ...? Photo released!

 

பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பான விளக்கத்தை ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ளார்.

 

அண்மையில் வெளியான அஜித்தின் 'வலிமை' படம் குறித்து பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தார். இதற்கு முன்பே அஜித்தின் திரைப்படங்கள் குறித்த ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் மாறனுக்கு எதிராக அவரது ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

 

Blue shirt Maran attacked ...? Photo released!

 

அஜித் படம் மட்டுமில்லாது வெளியாகும் அனைத்து படங்கள் குறித்தும் அவருக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்து வந்தார். இயக்குநர் பாண்டியராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்கள் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் குறித்து பல்வேறு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். வலிமை திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வைத்த விமர்சனங்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைத்தளங்களில் ப்ளூ சட்டை மாறனுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதற்கிடையே ப்ளூ சட்டை மாறன் பிவிஆர் திரையரங்கில் தாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ''பிவிஆர்ல என்னடா ஆகும்? தியேட்டர்னா நாலு பேரு பார்க்க வருவாங்க. முடிஞ்சதும் வெளியே போவாங்க. அதை மறைஞ்சு நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேரில் வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான. இதை ஷேர் பண்ற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ... வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி'' என ப்ளூ சட்டை மாறன் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

 

 

Next Story

"என்னால் நம்பவே முடியவில்லை" - 'ஆண்டி இண்டியன்' படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கருத்து 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

director bharathiraja talk about anti indian movie

 

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விமர்சகர் என அறியப்பட்ட புளூ சட்டை மாறன் என்பவர் ‘ஆன்டி இண்டியன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் ஆதம்பாவா. படம் முழுமையடைந்த பிறகு சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்குத் தடை விதித்தனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி மூலம் படத்தின் தடை நீங்கி வரும் 10ஆம் தேதி ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

 

ad

 

இந்நிலையில், 'ஆன்டி இண்டியன்' படத்தின் ப்ரிவியூ காட்சியைப் பார்த்த இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், பாக்யராஜ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

 

இப்படம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், “எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நீ இந்தப் படத்தை இயக்கியது என்னால் நம்பவே முடியவில்லை. இதுவரை நீ விமர்சித்த படங்களுக்குத் தகுதியானவன் என நிரூபித்துக் காட்டிருக்கிறாய். படம் நன்றாக இருந்தது, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.