/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/285_18.jpg)
விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஸ்ரீராம் சிவராமன் தயாரிப்பில் ஷபீர், மிர்னா, தீப்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பர்த்மார்க் (Birthmark). விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இப்படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறுகையில், “யாருமே தொடாத ஒரு சப்ஜெக்டை படமெடுக்க முடிவு செய்து இந்த கதைக்களத்தை கையில் எடுத்தோம். இயற்கை பிரசவ முறையில் குழந்தை பிறப்பது குறித்து பேசியுள்ளோம். இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் நிகழ்வே படத்தின் கதை. அந்த பெண் கதாபாத்திரத்திற்கு நிறைய பேரைத்தேடினோம். மிர்னா வந்த பிறகு அவருக்கு டெஸ்ட் லுக் எடுத்தோம். அவர் பொருத்தமாக இருப்பார் என தேர்ந்தெடுத்தோம். ” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)