கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனை அடுத்து காப்பான் படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதனிடையே இருவர் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். நிஜத்தில் ஜோடியான இவர்கள் தற்போது, மீண்டும் ‘டெடி’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arya with sakshi.jpeg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இப்படத்தை சக்தி சுவுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர் நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நான்காவது படமான டெடியின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். சதீஷை சாக்ஷி அடிப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தில் இவர்களுடன் சதீஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்க யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)