Skip to main content

செல்ஃபியால் பிக்பாஸ் ரைசாவுக்கு நடந்த விபரீதம்!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

முதல் வருட தமிழ் பிக்பாஸில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரைசா வில்லியம்ஸ். இவர் முதலில் மாடலாக அறிமுகமாகி, பின்னர் துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாக்களில் நடிகையாக வலம் வருகிறார்.
 

raiza


பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகினார். அதன்பின் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பதாக இருந்த வர்மா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் வெளியாகவில்லை.
 

hero


தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 

dabaang


இந்நிலையில் படுக்கையில் படுத்துக்கொண்டு செல்ஃபி எடுக்கும்போது மொபைல் போன் தவறி அவருடைய வாயில் விழுந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை ரைஸா வில்சனுக்கு காயம்

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

Actress Raiza Wilson injured

 

'பியார் பிரேமா காதல்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைஸா வில்சன், தொடர்ந்து எஃப்.ஐ.ஆர், காஃபி வித் காதல் எனப் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்போது தெலுங்கில் தி சேஸ், தமிழில் காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது. 

 

இந்நிலையில், தெருப் பூனை ஒன்று கடித்து அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டதாக அவரது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தெருப் பூனைகளுடன் விளையாடுவது வீட்டுப் பூனைகள் போல அல்ல எனக் குறிப்பிட்டு சிகிச்சை பெற்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதைப் பார்க்கையில் வலது கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. 

 

செல்லப் பிராணி விரும்பியாக இருக்கும் ரைஸா, தனது வீட்டில் பூனைக் குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுடன் விளையாடுவதை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவார். இந்நிலையில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் வருத்தத்தில் இருக்கிறார் ரைஸா.

 

 

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாகுபலி நடிகர்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
bnfxhshsh

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாகி வருகிறது. இதில் தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினர். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடந்த இரண்டு வருடங்களாகத் தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜுனா, படங்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த வருடம் பிக்பாஸ் நிகஸ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்குப் பதிலாக 'பாகுபலி' புகழ் நடிகர் ராணா இதனை தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.