anupama pathak

இந்திய சினிமா துறைகளில் ஒன்றான போஜ்பூரி சினிமாவை சேர்ந்த நடிகை அனுபமா பாதக் காலமானார்.

Advertisment

பீகாரை சேர்ந்த பாதக், இங்கு நடிப்பதற்காக மும்பையில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தார். நாற்பது வயதாகும் இவர், ஆகஸ்ட் 2ஆம் தேதி தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தற்கொலை செய்துகொள்வதற்கு முதல் நாள் ஃபேஸ்புக்கில், நண்பர்கள் சிலர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், யாரையும் நம்பமுடியவில்லை என்று புலம்பியுள்ளார். யாரையும் நம்பாதீர்கள், உங்களுடைய கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளாதீர்கள் என்று ரசிகர்களுக்கு அட்வைஸும் செய்துள்ளார்.

அவருடைய தற்கொலை குறிப்பில் ரூ.10,000 பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மனம் வருந்திதான் இந்த தற்கொலை முயற்சியை செய்துகொண்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.