Skip to main content

“தமிழனுக்கு பெருமை சேர்த்த மகா கலைஞன்” - பாரதிராஜா இரங்கல்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

bharathiraja condolence message for cheran father passed away

 

இயக்குநரும், நடிகருமான சேரனின் தந்தை பாண்டியன் (84). இவர் சினிமா ஆபரேட்டராக பணியாற்றினார். சமீப காலமாக உடல் நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற அவர், இன்று அதிகாலை 6.30 மணியளவில் மதுரை பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். இவரது மரணம் சேரன் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சேரனின் ரசிகர்களும் பாண்டியன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் பாரதிராஜா அவரது எக்ஸ் பக்கத்தில், “அன்னையைப் போற்றி ஆயிரம் திரைப்படங்கள் நம்மை தாலாட்டிச் சென்றாலும் தவமாய் தவமிருந்து என்கிற ஒரு காவியத்தை படைத்து தந்தையர்களுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்த்த மகா கலைஞன் சேரன், தன் தந்தையை இழந்து வாடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மகன் சேரனின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலா வந்த தகவல் -  மறுப்பு தெரிவித்த சேரன் 

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
cheran denied the news his directing prabhu deva kajol

இயக்குநர் மற்றும் நடிகரான சேரன், கடைசியாக ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். இதையடுத்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். சத்ய ஜோதி தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியானது. மேலும் ராமதாஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்தத் தகவல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சேரன், தான் சரத்குமாரை வைத்து மற்றொரு படம் இயக்கவுள்ளதாகவும் இந்தப் படம் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு இல்லை எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை இதனை மறுத்துள்ளார் சேரன். அவர் அடுத்து இயக்கவுள்ள கிச்சா சுதீப் படம் கைவிடப்பட்டதாகவும், பிரபு தேவா மற்றும் கஜோல் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் வதந்தி உலா வந்தது. இதனை மறுத்த சேரன், “தவறான செய்தி. கிச்சா சுதீப்பின் 47வது படத்தில் பணியாற்றி வருகிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.