Skip to main content

''மக்களிடம் இவ்வளவு பணம் வாங்கக்கூடாதுனு ஹீரோக்கள் சொல்ல வேண்டும்'' - கே.பாக்யராஜ்

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் 'புறநகர்'. ஸ்டண்ட் இயக்குனர் மின்னல் முருகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஈ.எல்.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் இயக்குனர் கே.பாக்யராஜ் படம் குறித்து பேசும்போது...

 

fsd

 

"ஸ்டண்ட் மாஸ்டர் படம் இயக்குவது மிகவும் அரிது. ஆனால் ஸ்டண்ட் மாஸ்டர் மின்னல் முருகன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்கள் அடிக்கின்ற சீனில் கலக்கி விடுவார்கள். ஆனால் டயலாக் பேச வேண்டும் என்றால் கலங்கி விடுவார்கள். ஆனால் இந்த ஸ்டண்ட் மாஸ்டர் மின்னல் முருகன் கதை எழுதி படமே இயக்கி இருக்கிறார் அவருக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள். நான் ஜாதியைச் சொல்லி அப்பவே படம் எடுத்துள்ளேன். டீக்கடையில்  ஒருகாலத்தில் தனி க்ளாஸ் வைத்து டீ கொடுத்தார்கள். எனக்கு கஷ்டமாக இருந்தது. வெள்ளாங்கோவில் என்ற ஊரில் அப்படி கொடுமை இருந்தது. அந்த கொடுமையை என் 'ஒரு கை ஓசை' என்ற படத்தில் அதே ஊரில் சென்று எடுத்தேன்.

 

 

அப்போது எல்லாம் இந்தளவுக்கு ஜாதிப் பிரச்சனை இல்லை. இப்போது சினிமா உள்பட பல இடங்களில் அதிகமாகி விட்டது. இந்தப்படத்தை பொறுத்தவரை சண்டைகள் மிகவும் நன்றாக இருக்கும். டான்ஸுக்கு நல்ல இம்பார்ட்டெண்ட் கொடுத்து இந்திரஜித் இசை அமைத்துள்ளார். இந்தக்காலத்தில் படம் எடுப்பதும், அதைச் சரியாக கொண்டு வருவதும் பெரிய விஷயம். இந்த டீம் ஒருவருக்கு ஒருவர் நல்ல உதவியாக இருக்கிறார்கள். மக்களுக்கு கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஹீரோக்களுக்கும் உண்டு. ஏன் என்றால் மக்களிடம்  இவ்வளவு பணம் டிக்கெட்டுக்கு வசூலிக்கக்கூடாது என்று ஹீரோக்கள் சொல்ல வேண்டும். படக்குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் " என்றார்.

 

சார்ந்த செய்திகள்