benz movie first schedule wrapped

லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட், பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஏப்ரலில் வெளியானது.

இப்படத்தின் பூஜை கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸின் பிறந்தநாளன்று அவரின் கதாபாத்திரம் தொடர்பான ஒரு சிறிய வீடியோ வெளியாகியிருந்தது. பின்பு சமீபத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி இப்படத்தில் இணைந்துள்ளதாக அவருடைய கதாபாத்திரம் தொடர்பான ஒரு வீடியோ வெளியானது. ட்வின் ஃபிஷ் வால்டர் என இரண்டு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இவரைத் தவிர்த்து மடோனோ செபாஸ்டியன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் எல்.சி.யு. பாணியில் வெளியான விஜய் நடித்த லியோ படத்தில் நடித்திருப்பார். அதில் அவரது கதாபாத்திரம் இறந்துவிடும். ஆனால் இப்போது பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் ‘லியோ’வுக்கு முந்தைய கதையாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

benz movie first schedule wrapped

Advertisment

இந்த நிலையில் சென்னையில் நடந்து வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் குறித்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பகிர்ந்து கொண்டதாவது, “சென்னை முழுவதும் பென்ஸ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஷெட்யூலில் ராகவா லாரன்ஸ் நடித்த முக்கியமான காட்சிகளை படமாக்கினோம். உண்மையிலேயே இந்த ஷெட்யூல் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என்றார். அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிட்டுள்ளார்.