/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/barathiraja_29.jpg)
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு லேசான கரோனா அறிகுறி தென்பட்டுள்ளதை அடுத்து நேற்று இரவு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரம் மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் விஜயகாந்த். இதனால் பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில், “நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு, மிகச் சிறந்த மனிதர். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி கவலையளிக்கிறது. அவர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பபிரார்த்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)