balakrishna Sami dharisanam at kumbakonam

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா, கடைசியாக 'பகவந்த் கேசரி' படத்தில் நடித்திருந்தார். கடந்த 19ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனது 109வது படமாக இயக்குநர் கேஎஸ் ரவிந்திர என்கிற பாபியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே ஆந்திரமாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் தமிழ்நாடு வந்துள்ள பாலகிருஷ்ணா, கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisment