Skip to main content

அக்கினேனி குடும்பத்தை வம்புக்கு இழுத்த பாலகிருஷ்ணா; ஒன்று திரண்ட சைதன்யா பிரதர்ஸ்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

balakrishna akkineni issue

 

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா விளையாட்டாகவும் கோபப்பட்டும் சில செயல்களைச் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க செல்போனை ஒருவர் கொடுத்த போது, அதைத் தூக்கி எறிந்தார். பின்பு மற்றொரு நிகழ்ச்சியில் அவருடன் போட்டோ எடுக்க குழந்தையுடன் ஒரு ரசிகர் சென்ற நிலையில், அந்தக் குழந்தையை விளையாட்டாக அடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கச் சொன்னார். இதுபோன்று பாலகிருஷ்ணா செய்த பல நிகழ்வுகள் சர்ச்சையாயின. 

 

அந்த வகையில், ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் சக்சஸ் மீட்டில் பாலகிருஷ்ணா பேசியுள்ளது சர்ச்சையைத் தாண்டி குறிப்பிட்ட திரைப்பிரபலங்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளுள் ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைக் குறிப்பிட்டு பேச்சுவழக்கில் மரியாதை குறைவாகப் பேசியுள்ளார். இது அக்கினேனி குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக பாலகிருஷ்ணாவின் பேச்சிற்கு அக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரன்கள் நாகசைதன்யா மற்றும் அகில் அக்கினேனி கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

இது தொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நந்தமுரி தாரக ராமராவ், அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரின் பங்களிப்புகள் தெலுங்கு சினிமாவில் பெருமை வாய்ந்ததாகவும் அசைக்க முடியாத தூண்களாகவும் இருக்கின்றன. அவர்களை தரக்குறைவு செய்யும்படி நடந்து கொள்வது நம்மை நாமே இழிவுபடுத்துவதற்கு சமமானது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக அக்கினேனி குடும்பத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கும்பகோணத்தில் சாமி தரிசனம் செய்த பாலகிருஷ்ணா

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

balakrishna Sami dharisanam at kumbakonam

 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா, கடைசியாக 'பகவந்த் கேசரி' படத்தில் நடித்திருந்தார். கடந்த 19ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனது 109வது படமாக இயக்குநர் கேஎஸ் ரவிந்திர என்கிற பாபியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 

 

இந்த நிலையில் தமிழ்நாடு வந்துள்ள பாலகிருஷ்ணா, கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

நாக சைதன்யாவுடன் ஜோடி போடும் சாய் பல்லவி

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

sai pallavi to pair with naga chaitanya in new movie

 

நாக சைதன்யாவின் 23வது படத்தை, சந்து மொண்டேடி இயக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்குகிறார். இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கதாநாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார். மேலும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை விரைவில் தயாரிப்பு குழு அறிவிக்கவுள்ளனர்.