Skip to main content

'இளையராஜா 75 விழா மட்டும் போதாது...' - கே.பாக்யராஜ் 

Published on 25/01/2019 | Edited on 26/01/2019
kb

 

கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜு முருகனின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா அவர்களின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச்.வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் கே. பாக்யராஜ் பேசியபோது...

"கரு. பழனியப்பன் சரவணனின் வாழ்க்கை வரலாற்றையே கூறி விட்டார். சினிமாவில் சாதித்த அனைவருடனும் சரவணன் பழகியுள்ளார். சரவணன் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். படத்தின் வெற்றி விழா கண்டிப்பாக நடக்கும். படம் உருவாக காரணமாக இருந்த ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள். ராஜு முருகன் குக்கூ படம் பார்த்தேன். கதை, வசனம் அருமை. பார்வை இல்லாதவர்களையும் திறமையாக நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தில் யுகபாரதி வரிகள் பிரமாதம். சான் ரோல்டன் இசை அற்புதம். இளையராஜாவிற்கு இளையராஜா 75 விழா மட்டும் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அப்பா ரொம்ப ஃபீல் பண்ணாரு... சாரி!" - கரோனாவில் பாக்யராஜ்! சாந்தனு விளக்கம்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

dgxdbdb

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நேற்று (07.05.02021) பதிவிட்டார். அதில், தன் பெற்றோர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து சாந்தனு தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"Dear wellwishers

அப்பா compulsory ஓய்வுல இருக்கணும்னு Dr’s அட்வைஸ், அதான் phone’la யார்கிட்டயும் பேச முடியல.
நான் பேசலேன்னு கால் பண்ணவங்க feel பண்ணுவாங்கன்னு அப்பா ரொம்ப feel பண்ணாரு. Sorry, புரிஞ்சுக்குவீங்கன்னு தெரியும். ரெண்டு பேரும் நலமா இருக்காங்க. We will return ur calls soon" என பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

கே. பாக்யராஜ் தம்பதியருக்கு கரோனா தொற்று உறுதி! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

gdsgdsgsdgdsgs

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் பெற்றோர் கே. பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுங்கள். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார்.