/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Eu-I6FzUUAQiOiZ.jpg)
'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார். இவர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பணப்பிரச்சனை காரணமாக, பாதியில் முடங்கிய இப்படத்தின் பணிகள், கரோனா நெருக்கடிநிலை காரணமாக நீண்ட நாட்களாகவே கிடப்பில் இருந்தது. பின் மீண்டும் படப்பிடிப்பைத் துவங்கிய படக்குழு, படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், படப்பிடிப்பு நாட்களுக்கு இணையான நாட்கள் படத்தின் சி.ஜி. பணிகளுக்குத் தேவைப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டாலும், இந்த ஆண்டு இறுதியில்தான், 'அயலான்' திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘அயலான்’ படத்தின் டப்பிங் பணிகள் இன்று (24.02.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளன. இத்தகவலை, தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)