சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 129 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்த கரோனா வைரஸால் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில் மார்வெல் படமான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான், தோர் மற்றும் ஹாப்ஸ் அன்ட் ஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்த இட்ரிஸ் எல்பாவுக்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “ கரோனா பரிசோதனை நடைபெற்றதில் எனக்கு வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா வைரஸ் அறிகுறிகள் என்று சொல்லப்படும் எதுவும் எனக்கு இல்லை. இருந்தாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். வீட்டிலேயே இருங்கள், பிராக்டிக்கலாக இருங்கள். நான் எப்படி இருக்கிறேன் என்பதை அப்டேட் செய்துக்கொண்டே வருகிறேன். பயப்படவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.