Skip to main content

‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்!

vijay

 

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள அடுத்த படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

 

 

அனிருத் இசையமைக்க, விஜய்யுடன் விஜய்சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகுவதாக இருந்த மாஸ்டர் திரைப்படம் கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டது. 

 

 

திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ அதுவரை மாஸ்டர் படம் வேறு எந்த ஓடிடியில் வெளியிடப்போவதில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மாதம் அமேசானில் வெளியாகும் படங்கள் லிஸ்ட்டில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாஸ்டர் என்று பெயரிடப்பட்டிருப்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்ப மாஸ்டர் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

 

 

அதில், “இன்னும் 'மாஸ்டர்' படத்தின் ஃபைனல் அவுட்டை எடுக்கவே இல்லை. படம் கண்டிப்பாகத் திரையரங்கில்தான் வெளியாகும். அதில் மாற்றுக் கருத்தில்லை. கரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 9ஆம் தேதி 'மாஸ்டர்' வெளியாகியிருக்கும்.

 

 

அந்தத் தேதியில் வெளியானால், அமேசான் ஓடிடியில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியீடு என்று முடிவு செய்திருப்பார்கள். அதே தேதியைத் தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்