Skip to main content

நீண்ட இழுபறிக்குப் பிறகு ரிலீஸ் தேதியை உறுதி செய்த அதர்வா படக்குழு

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

atharvaa's movie release date announced

 

கடந்த 2017ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'நின்னு கோரி' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக், 'தள்ளிப் போகாதே' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்க, அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில்,பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. 

 

ad

 

இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. அதன்படி 'தள்ளிப் போகாதே' திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்