Skip to main content

போதைப் பொருள் வழக்கு ; விசாரணையில் அதிர்ச்சி தகவல் - அடிபடும் நடிகைகள்

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

Ashu reddy , Surekha Vani and other celebrities names producer KP Chowdary  case

 

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி சமீபத்தில் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். கோவாவில் உள்ள நைஜீரிய நபரிடம் இருந்து போதைப் பொருள்களை வாங்கி ஹைதராபாத் கடத்தியுள்ளதாக சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் ரஜினியின் கபாலி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டவர்.  

 

இவர் கைதாகியிருப்பது டோலிவுட் திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் போலீசார் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் பல்வேறு டோலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களுடன் வாட்ஸ்அப் மற்றும் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

மேலும், நைஜீரியாவை சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டோலிவுட் துறையில் உள்ள பிரபலங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்பவராக இவர் பங்கு வகித்தாரா என்பதைத் தீர்மானிப்பதில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்த வழக்கில், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த நடிகை ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் ஹைதராபாத்தில் வசிக்கும் முக்கியமான பிரபலங்கள் பெயர்களும் அடிபடுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் போலீஸ் தரப்பு இது குறித்து உறுதிப்படுத்தவில்லை. 

 

இந்நிலையில் நடிகை சுரேகா வாணி, ஜோதி மற்றும் அஷூ ரெட்டி ஆகியோரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. மேலும் கைதான தயாரிப்பாளரும் சுரேகா வாணியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதையடுத்து நடிகை அஷூ ரெட்டி, இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டு இது பொய்யான தகவல் என விளக்கமளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவல் நிலையத்தை நாடிய விஜய் தேவரகொண்டா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay devarakonda family star trol complaint issue

கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படம் ஃபேமிலி ஸ்டார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்க திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

இப்படம் கடந்த 5ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியான நிலையில் கலைவையான வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ட்ரோல்களுக்கு எதிராக விஜய் தேவரகொண்டா தரப்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் தேவரகொண்டாவின் மேலாளர் அனுராக் மற்றும் அவரது ரசிகர் மன்ற தலைவர் நிஷாந்த் குமார் அளித்த புகாரில், “விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் இப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனிநபராகவும் குழுக்களாகவும் இதை செய்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா தன் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.