Skip to main content

'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' - டெல்டா பகுதி மக்களுக்கு உதவி வரும் அருண்விஜய் 

Published on 24/11/2018 | Edited on 24/11/2018
arunvijay

 

 

 

‘கஜா’ புயல் தாக்கி தமிழக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில்  திரை உலகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் அருண்விஜய் பாதிப்பு அடைந்த பகுதிகளில் தன்னுடைய நேரடி கண்காணிப்பின் பேரில் நிவாரண பணியினை மேற்கொண்டு உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "புயலால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் அவலம் சொல்லில் அடங்காதது. வெறும் பண மற்றும் பண்ட உதவி மட்டுமே அவர்களின் துயரை ஆற்றாது. நாம் நேரிடையாக களத்தில் இறங்கி பணியாற்றும் அந்த சேவை மனப்பான்மை அவர்களுக்கு மேலும் ஊக்கமும் நிம்மதியும் தரும். இந்த அறிக்கையின் வாயிலாக இளைஞர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், 'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்பதை பாதிக்கப்பட்டோருக்கு உணர்த்துங்கள். அது அவர்களுக்கு எதையும்  எதிர்கொள்ளும் மனவலிமையை தரும் " என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

அருண் விஜய் பட வெளியீட்டு உரிமம் பெற்ற லைகா

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

 Arun Vijay film release licensee by Lyca

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்று, உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி தயாரித்துள்ளனர். 

 

சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் எப்போதும் நல்ல படங்களுக்கு மதிப்பு தரக்கூடியது. தனித்துவமான கதைகள் மற்றும் நம்பிக்கைக்குரிய உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது. இதன் மூலம் இதுபோன்ற திட்டங்களுக்கு பிரம்மாண்டமான வெற்றியை சேர்க்கிறது. லைகா புரொடக்‌ஷனின் இந்த லீக்கின் சமீபத்திய வரவாக எம். ராஜசேகர் & எஸ். சுவாதி தயாரிப்பில் நடிகர் அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே' திரைப்படம்  இணைந்துள்ளது.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய்ச் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.  

 

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை எமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.