கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியாகி பலரின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம் '96'. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இந்த படத்தை இயக்கினார். மேலும் இந்த படத்தில் கோவிந்த் வசந்தின் இசையும் பலரால் வரவேற்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arjun janya.jpg)
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தமிழகத்தில் அடைந்த வெற்றியை தொடர்ந்து 99 என்ற தலைப்பில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. கணேஷ் - பாவனா நடிப்பில் உருவானது. கன்னடத்தில் பிரபல கன்னட பட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜான்யா இசையமைத்திருந்தார்.
அது அவருக்கு 100வது படமாகும். இந்நிலையில் இசையமைப்பாளர் அர்ஜூன் ஜான்யாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள், தற்போது அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)