/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arjun-im.jpg)
தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில், கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றியடைந்த படம் 'கைதி'. அப்படத்தில் ‘அன்பு’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் அர்ஜுன் தாஸ்.இதைத் தொடர்ந்து, அர்ஜுன் தாஸ் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையே அட்லீ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கும் 'அந்தகாரம்'படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்அர்ஜுன் தாஸ்.சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம்நவம்பர் 24 ஆம் தேதி, நெட்ஃப்ளிக்ஸில்வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டது, அதைத்தொடர்ந்துநேற்று இரவு 12 மணிக்குவெளியாகிவுள்ளது.
இதனை தொடர்ந்து அர்ஜுன் தாஸ், படக்குழுவுக்கும் இயக்குனருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளட்விட்டில், "அந்தகாரம் தற்போது,நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிவுள்ளது. அட்லீ, பிரியாஅட்லீ, சுதன்ஆகியோருக்கு நன்றி. இப்படம், எப்போதும்விக்னராஜனின் அந்தகாரமாகத்தான் இருக்கும். யாருமேஎன்னைநம்பாதபோது, என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் விக்னராஜனுக்குநன்றி.உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் எனநம்புகிறேன்"எனகூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)