Skip to main content

“டிக்கெட் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்...”- அரவிந்த் சாமி 

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

aravind sami

 

 

கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன. இருப்பினும் கரோனா குறித்த அச்சம் தொடர்ந்து நிலவி வருவதால், 50 சதவிகிதப் பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால், பெரும்பாலான திரையரங்குகள், ரசிகர்கள் வரவின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு 100 சதவித இருக்கைகளுடன் திரையரங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பின. அப்போது இதை விமர்சித்து நடிகர் அரவிந்த் சாமி, “50 சதவீதம் என்பது சில நேரங்களில் 100 சதவிகிதத்தை விட சிறப்பாக இருக்கும். அதில் இதுவும் ஒன்று" எனக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது.

 

மத்திய உள்துறை அமைச்சகம் 100 சதவித இருக்கைகளுடன் திரையரங்கம் இயங்குவதை மறுபரீசிலனை செய்யும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி தமிழக அரசு மறு அறிவிப்பு வரும் வரை திரையரங்குகள் 50 சதவித இருக்கைகளுடனே திரையரங்கங்களை இயக்குமாறு அறிவித்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் சூழலில், மறுபுறம் டிக்கெட்டுகளையும் அதிக விலைக்கு விற்க தொடங்கியுள்ளனர்.

 

இதனால் சினிமா ரசிகர்கள் பலரும் ஏன் டிக்கெட் விலையை இவ்வளவு உயர்த்தி விற்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி திரையரங்க உரிமையாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், "வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும் போது, டிக்கெட்டின் விலை மட்டும் ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என எனக்கு எப்போதுமே புரியவில்லை" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் சாமியுடன் மோத ஆர்வமாக இருக்கும் கார்த்தி

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

karthi premkumar movie update

 

ராஜுமுருகன் இயக்கும் 'ஜப்பான்' படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை முடித்துவிட்டு 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனை ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ள நிலையில் அந்தப் பதிவில், "என்னுடைய அடுத்த படம் அழகான காதல் கதையை வழங்கிய 96 பட இயக்குநர், பிரேம்குமார் இயக்கத்தில் தான். இதில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிக்கின்றனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2டி நிறுவனம் விரைவில் படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிப்பார்கள் எனப் பதிவிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த கார்த்தி பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

எனவே 2டி நிறுவனம் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், கடைக்குட்டி சிங்கம், விருமன் படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

 

 

 

Next Story

'ஏகே 62' - அஜித்திற்காக ரூட்டை மாற்றிய அரவிந்த்சாமி, சந்தானம்?

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

aravind samy  and santhanam to act in ajith 62 movie reports

 

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் பொங்கலை முன்னிட்டு வருகிற 11 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'ஏகே 62' படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'ஏகே 62' படத்தில் அரவிந்த்சாமி வில்லன் கதாபாத்திரத்திலும் சந்தானம் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 

 

'தனி ஒருவன்' படத்தின் மூலம் வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி, அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால், அப்படங்கள் பலவும் ரிலீசாகாமல் கிடப்பில் உள்ளன. இதனால் மீண்டும் தனது கவனத்தை வில்லன் கதாபாத்திரம் பக்கம் அரவிந்த்சாமி செலுத்தவுள்ளதாகத் தெரிகிறது. அந்த வகையில், இப்போது மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன்னதாக அரவிந்த்சாமியும் அஜித்தும் ஒரே படத்தில் நடித்துள்ளனர். 1994 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான 'பாசமலர்கள்' படத்தில் அஜித் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது 'ஏகே 62' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. 

 

சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு மற்ற படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். ஆனால், 'ஏகே 62' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் இத்தகவல் ரசிகர்களைச் சற்று குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஹீரோவிலிருந்து திரும்பவும் தனது கவனத்தைத் திருப்பியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதுகுறித்து படக்குழுவும் சந்தானமும் விரைவில் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு பட ரிலீசுக்கு பிறகு 'ஏகே 62' பட அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.