aranmanai 4 sundar c to replace vijay sethupathi character

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின.

Advertisment

'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில் கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது.

Advertisment

இதனை தொடர்ந்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்க லைகா தயாரிக்கவுள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் 'அரண்மனை 4' படத்தில் விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதில் சுந்தர்.சியேமீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி, தற்போது 'குரங்கு பொம்மை' படத்தை அடுத்து இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தமிழில் 'விடுதலை', இந்தியில் 'ஜவான்', 'மும்பைக்கார்', 'மெர்ரி கிறிஸ்துமஸ்' உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.