Skip to main content

ஹிந்தி திணிப்பை கலாய்க்கிறாரா ஏ.ஆர். ரஹ்மான்? வைரலாகும் ட்வீட்...

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து 31.5.2019 அன்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  
 

rahman

 

 

இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https:\\mhrd.gov.in என்ற இணையதளத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ள புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 

இந்நிலையில் பலரும் இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று ட்விட்டரில் தமிழ்நாடு ஹிந்தி திணிப்புக்கு எதிராக உள்ளது என்ற ஹேஸ்டேகும் ட்ரெண்டானது. பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
 

 

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாபி ஒருவர் மரியான் படத்தில் வரும் தமிழ் பாடல் ஒன்றை பாடியுள்ளதை எடுத்து பகிர்ந்து. அதனுடன் பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டிற்கு கமெண்ட் செய்யும் பலரும், ரஹ்மான் சூசகமாக ஹிந்தி திணிப்பை கலாய்ப்பதாக சொல்லி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்