Skip to main content

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நம் வீரர்களுக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஒரு பாடல்!

Published on 08/07/2021 | Edited on 14/07/2021

 

bfnfdnfdx

 

2020ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, இம்மாதம் 23ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோ நகரில் தொடங்கவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இதுவரை 120க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தகுதிபெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். இவர்களை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நம் நாட்டின் ஒலிம்பிக் வீரர்களை மிகவும் உற்சாகப்படுத்தும் விதமாக 'ஹிந்துஸ்தானி வே' (Hindustani Way) என்ற பாடலை திறமைசாலியான பாடகி அனன்யா பிர்லாவுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளேன்" என அறிவித்துள்ளார். இந்திய அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் வரும் ஜூலை 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்