
ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "என்ன ஒரு சோகம்... பெருந்துயரம் தரும் செய்தி. ஒடிசாவின் குடும்பங்களுக்கும் மக்களுக்கும் எனது பிரார்த்தனைகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
#OdishaTrainCrash What a tragedy…..Devastating news 🤲🏼Prayers to the families and people of Odisha! @Naveen_Odisha— A.R.Rahman (@arrahman) June 3, 2023