
திரைத்துறையில் தோட்டகுரு சோமராஜு மற்றும் சலூரி கோட்டேஷ்வர் ராவ் ஆகிய இருவரும் இணைந்து 'ராஜ்-கோட்டி' என்ற பெயரில் இசையமைப்பாளர்களாக வலம் வந்தனர். இருவரும் சேர்ந்து 180 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளனர். 80 மற்றும் 90களில் பிரபலமான இசையமைப்பாளர்களாக இருந்தனர்.
இதில் இசையமைப்பாளர் ராஜ் (68) நேற்று காலமானார். அவர் நேற்று குளியலறையில் தவறி விழுந்து மாரடைப்பில் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது மறைவு இசையுலகிலனரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "80களில் ராஜ்-கோடியுடன் பணிபுரிந்த இனிமையான நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது" என பதிவிட்டுள்ளார். ராஜ்-கோட்டியிடம் சவுண்ட் இன்ஜினியராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rest in peace Somaraju Garu …I can never forget the pleasant memories working with Raj-koti in the 80s ❤️🩹🤲🏼🙏🥀🌹💐 pic.twitter.com/xQdwYMyWs1— A.R.Rahman (@arrahman) May 22, 2023