/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/40_55.jpg)
2019 ஆண்டு மலையாளத்தில் வெளியான மனோகரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அபர்ணாதாஸ். கேரளாவை சேர்ந்த அவர் அடுத்த படமாகவே தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமாக உருமாறினார். பின்பு தமிழில் கவினுக்கு ஜோடியாக நடித்த டாடா படம் அடுத்தகட்டத்திற்கு அவரை அழைத்து சென்றது. மேலும், ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான நடிகையாக மாற்றியது.
இதனிடையே தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த ஆண்டு ஆதிகேஷவா படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். இப்படி மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்து வரும் அபர்ணா தாஸ் தற்போது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் தீபக் பறம்போலை நீண்ட நாள் காதலித்து வந்ததாகவும் ஏப்ரல் 24ஆம் தேதி அவரை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் கேரளாவின்வடக்காஞ்சேரியில் நடக்கவுள்ளதாகவும் இது தொடர்பான பத்திரிக்கை ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/43_61.jpg)
மலையாள படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபக் பறம்போல், விஸ்வ விக்யாதரய பையன்மார் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து லவ் ஆக்ஷன் ட்ராமா, ஹெவன், கன்னூர் ஸ்குவாட் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியாகி மலையாளத் திரையுலகில் பெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்திருந்தார். இருவரும் மனோகரம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்போது இருவருக்கும் திருமண நடக்கவுள்ளதாக சொல்லப்படும் தகவல் வைரலாக பேசப்படும் நிலையில், இருவர் தரப்பிலிருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் தீபக் பறம்போல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஜோடியாகவீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிலும் ஏப்ரல் 24 என்றதேதிகுறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)