Skip to main content

அஞ்சலி நடிக்கும் வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

anjali web series Fall released date announced

 

தமிழ்த் திரையுலகில் படங்களைத் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இதனால் பல முன்னணி பிரபலங்கள் இணையத் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் 'ஃபால்'. 

 

இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை இயக்குநர் சித்தார்த் ராமசாமி இயக்கியது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்த தொடர் 'வெர்டிஜ்' எனும் கனடிய வெப் தொடரின் அதிகாரப்பூர்வ தழுவலாகும்.  

 

இந்நிலையில் இந்த தொடரின் ட்ரைலர் தற்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழில் உருவாக்கப்பட்ட இந்த தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து டிசம்பர் 9-ல்  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் 4 புதிய எபிசோடுகள்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
hot bread web series update

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், அதன் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. இந்த சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான் ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில், நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரிஸில், கடந்த வார இறுதி எபிஸோடில் ரீனா, மருத்துவர் ரதியின் மகள் எனும் டிவிஸ்ட் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்கு கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தான்தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள்.

இந்த சூழ்நிலையில் ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன? ஏன் ரீனாவை பிறந்தவுடன் தன்னுடன் வளர்க்காமல் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றாள்? ரீனாவை மகளாக ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்தில் இணைத்துக் கொள்வாரா?. இத்தனை கேள்விகளுக்கு அடுத்தடுத்த எபிஸோடுகளில் பதில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஹார்ட் பீட் சீரிஸ் - அடுத்தடுத்து வெளியாகும் ட்விஸ்ட்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
hot bread web series update

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், அதன் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான் ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில், நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரிஸில், கடந்த வார இறுதி எபிஸோடில் ரீனா, மருத்துவர் ரதியின் மகள் எனும் டிவிஸ்ட் தெரியவந்துள்ளது. இனி என்ன நடக்கும், உண்மை தெரிய வரும்போது ரதி என்ன செய்வார்? ஏன் ரதி ரீனாவை ஒதுக்கி வைத்தார். ரதியின் குடும்பத்தில் ரீனா இணைவாரா? ஆகிய கேள்விகளுக்குப் பதில் அடுத்த எபிசோடுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.