Skip to main content

ஆக்ஷன் அவதாரம் எடுத்த ஆண்ட்ரியா!

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

andrea jeremiah starring ka film release april

 

தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கும் 'பிசாசு 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குநர் நாஞ்சில் இயக்கும் 'கா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.  

 

முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சலீம் ஹவுஸ், புகழ் கமலேஷ், 'சூப்பர் டீலக்ஸ்' பட புகழ் நவீன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது எனவும் விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்