andrea about vijay politics

நடிகையாகவும், பாடகியாகவும் திரையுலகில் வலம் வருபவர் ஆன்ரியா. இவர் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளில் பாடுவதும், கடை திறப்பு விழாக்களிலும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இன்று புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="415267ef-29f8-49e1-96f1-fb09dc23c5ca" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_28.jpg" />

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் பணியாற்றி வரும் திரைப்படம் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், “நான் இப்போது கவினின் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து வருகிறேன்” என்றார். அதைத் தொடர்ந்து படம் வரவில்லை என்றாலும் உங்கள் பாடல் வரும். அதுவும் இப்போது வரவில்லை பாடல் பாடுவதை நிறுத்தி விட்டீர்களா? என்ற கேள்விக்கு, அவர் “அப்படியெல்லாம் இல்லை. நான் பாடாமல் இருக்கிறேன். அவ்வளவுதான். மீண்டும் பாடத் தொடங்குவேன்” என்றார்.

Advertisment

இதையடுத்து உங்களுக்கு யாருடைய பயோ பிக்கில் நடிக்கலாம் என்ற ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்கு “அப்படியெல்லாம் ஒன்னும் பெரிய ஆசை இல்லை” என்றார். பிறகு விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் இனி வரும் காலங்களில் நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக எனக்கு அந்த மாதிரி எந்த நோக்கமும் இல்லை. நான் விஜய்யை நினைத்து சந்தோஷப்படுகிறேன்” என்றார். மேலும் ‘வடசென்னை’ திரைப்படம் குறித்த கேள்விக்கு “வடசென்னை 2 படம் நடந்தால்... கண்டிப்பாக சந்திரா மீண்டும் வருவாள், அதுல எந்த டவுட்டும் கிடையாது ” என்று பதிலளித்தார்.