Skip to main content

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்!

 

andhaghaaram

                                                   
தமிழில் கார்த்தி நடிப்பில், கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றியடைந்த படம் 'கைதி'. அப்படத்தில் ‘அன்பு’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் அர்ஜுன் தாஸ்.

 

ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்த இவரின் குரலால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், அவரை தனது 'துருவ நட்சத்திரம்' பட டீசரில் வாய்ஸ் ஓவர் தர வைத்தார். அந்த டீசரில் அர்ஜுன் தாஸின் குரலைக் கேட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'கைதி' படத்தில் நடிக்கவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதைத் தொடர்ந்து, அர்ஜுன் தாஸ் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே அட்லீ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கும் 'அந்தகாரம்' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அர்ஜுன் தாஸ். சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

 

இந்தநிலையில், 'அந்தகாரம்' படம், வரும் நவம்பர் 24 -ஆம் தேதி ,நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்